2025 தமிழ் சினிமா ஒரு ரீ-வைண்ட் | ஜன.3ல் 'பராசக்தி' பாடல் வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புகையிலை விளம்பரத்திற்கு ரூ.40 கோடி: தைரியமாக மறுத்த சுனில் ஷெட்டி | ‛பருத்திவீரன்' புகழ் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார் | 2026லாவது அஜித் படம் வருமா | அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் | திடீரென மேலாளரை நீக்கிய விஷால் | பிளாஷ்பேக்: பாடல்கள் இல்லாத 'வண்ணக் கனவுகள்' |

ஒரு காலத்தில் வெளியான தமிழ்த் திரைப்படங்கள் 3 மணி நேரம் வரை கூட இருந்தன. அவற்றையெல்லாம் அப்போதைய ரசிகர்கள் மிகவும் பொறுமையாக அமர்ந்து பார்த்து ரசித்தார்கள்.
70களில் இரண்டரை மணி நேரப் படங்கள் என கொஞ்சம் மாற்றினார்கள். அதன்பின் தேவைப்பட்டால் 3 மணி நேரப் படங்களை எடுத்தார்கள். தமிழ் சினிமாவில் அதிக நேரம் கொண்ட படம் என்று பார்த்தால் சேரன் இயக்கத்தில் 2005ல் வெளிவந்த 'தவமாய் தவமிருந்து' படத்தைச் சொல்லலாம். அப்படம் 3 மணி நேரம் 24 நிமிடங்கள் ஓடக் கூடிய ஒரு படம்.
கடந்த ஓரிரு வருடங்களில் சில முக்கிய இயக்குனர்கள் இரண்டே முக்கால் மணி நேரப் படத்தைக் கொடுத்து நம் பொறுமையை சோதித்து வருகிறார்கள்.
இந்த வருடத் துவக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த 'வாரிசு' படம் 2 மணி நேரம் 47 நிமிடமும், சமீபத்தில் வெளிவந்த 'லியோ' படம் 2 மணி நேரம் 44 நிமிடமும் ஓடக் கூடிய படங்கள். ரஜினி நடித்து வெளிவந்த 'ஜெயிலர்' படம் 2 மணி நரம் 48 நிமிடப் படமாக இருந்தது.
அந்தப் படங்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தின் நேரம் அமைந்துள்ளது. இப்படத்தின் தணிக்கை இன்று நடந்து முடிந்துள்ளது. அதில் படத்தின் நேரம் 2 மணி நேரம் 52 நிமிடம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இனி நம் முன்னணி இயக்குனர்கள் 3 மணி நேரத்தைத் தொடாமல் படங்களை இயக்க மாட்டார்கள் போலிருக்கிறது.




