ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
சிம்புவின் நண்பரான மஹத் ராகவேந்திரா 'வல்லன்' படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். அதன்பிறகு காளை, மங்காத்தா, பிரியாணி, ஜில்லா உள்ளிட்ட படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்தார். 'பேக் பென்ஞ் ஸ்டூடன்ட்' என்ற தெலுங்கு படத்தில் ஹீரோவாக நடித்தார். தற்போது தமிழில் 'காதலே காதலே' என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார். பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்குமார், வி.டி.வி கணேஷ், ரவீனா ரவி மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஸ்ரீவாரி பிலிம் சார்பில் பி. ரங்கநாதன் தயாரிக்கிறார். விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார், சுதர்சன் கோவிந்தராஜன் ஒளிப்பதிவு செய்கிறார்.
ஆர். பிரேம்நாத் எழுதி இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: அனைவரின் வாழ்க்கையிலும் இளமை பருவத்தில் இருந்து முதுமை வரை தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக காதல் இருந்து வருகிறது. இருப்பினும், காதலில் விழுவதும் அந்தத் துணையுடன் வலுவான உறவில் இருப்பதும் காலப்போக்கில் மாறிவிட்டது. 'காதலே காதலே' தற்போதைய தலைமுறையின் வாழ்க்கை, காதல் மற்றும் உறவுகள் பற்றிய அவர்களின் கண்ணோட்டத்தை திரையில் காண்பிக்க இருக்கிறது. பொழுதுபோக்கு அம்சங்களுடன் காதல் கொண்டாட்டமாக இந்தப் படம் இருக்கும். என்றார்.