நடிகர் ரஜினி தற்போது தனது 170வது படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் திருவனந்தபுரத்தில் தொடங்கி பின்னர் தென்காசி அம்பாசமுத்திரம் பகுதிகளில் நடந்தது. இதன் தொடர்ச்சியாக மும்பையில் கடந்த ஒரு வாரமாக படப்பிடிப்புகள் நடந்தன. இதில் ரஜினி அமிதாப்பச்சனுடன் நடித்தார்.
ரஜினியும் அமிதாப்பச்சனும் 1991ம் ஆண்டு வெளியான 'ஹம்' என்ற ஹிந்தி படத்தில் இணைந்து நடித்தனர். 33 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இருவரும் சேர்ந்து நடித்துள்ளார்கள். மும்பை படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் நேற்று மும்பையில் இருந்து ரஜினிகாந்த் சென்னை திரும்பி வந்தார். சென்னை விமான நிலையம் வந்த ரஜினி அங்கிருந்து காரில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.