தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
கேவி மீடியா சார்பில் பி.செந்தில்நாதன் தயாரிக்கும் படம் 'பிரம்ம முகூர்த்தம்'. டி.ஆர்.விஜயன் இயக்குகிறார். விஜய் விஷ்வா, அபர்ணா நாயகன் நாயகியாக நடிக்கிறார்கள். இவர்களுடன் மதன்பாப், அப்புகுட்டி, பெஞ்சமின், ரங்கநாதன், அனுமோகன், விஜய கணேஷ், இமான் அண்ணாச்சி, கோதண்டம், அறந்தாங்கி சங்கர் ஆகியோர் நடிக்கிறார்கள். ஸ்ரீசாஸ்தா இசை அமைக்கிறார். நவ்ஷத் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் விஜயன் கூறும்போது “காமெடி ஜானரில் மாறுபட்ட திரை அனுபவமாக உருவாகிறது. ஒரு இளம் ஜோடியின் திருமண ஏற்பாட்டில் நடக்கும் களேபரங்களும், அதைக் கடந்து அந்த திருமணத்தை நடத்த, நாயகன் நடத்தும் போராட்டங்களும், பரபர திரைக்கதையில், வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் காமெடியுடன் கூடிய கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்காடு சென்னை, திருவள்ளூர், ஆகிய இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுதாக முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது” என்றார்.