எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' | பிரபாஸ் ஜோடியாகும் அனிமல் பட நடிகை! சீன, கொரியன், ஜப்பானிஸ் மொழிகளிலும் ரிலீசாகும் ‛ஸ்பிரிட்' | மோகன் ராஜா இயக்கத்தில் சிம்பு? | பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம்? |
ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், காஜல் அகர்வால், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'இந்தியன் 2'. கடந்த சில வருடங்களாக பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.
இரண்டாம் பாகம் என ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படத்தை மூன்றாவது பாகத்திற்கும் சேர்த்து படமாக்கியுள்ளதாகச் சொல்கிறார்கள். தயாரிப்பு நிறுவனமும் அதற்கு சம்மதித்து கலைஞர்களுக்கு கூடுதல் சம்பளத்தையும் தரச் சம்மதித்துள்ளதாம். மூன்றாம் பாகத்திற்கான சில காட்சிகளைப் படமாக்க வேண்டியிருப்பதால் அவற்றின் படப்பிடிப்பும் விரைவில் ஆரம்பமாக உள்ளதாகச் சொல்கிறார்கள்.
'இந்தியன் 2' படத்தை 2024ம் ஆண்டின் கோடை விடுமுறையிலும், 'இந்தியன் 3' படத்தை 2025ம் ஆண்டு பொங்கலுக்கும் வெளியிடலாமா என யோசித்து வருகிறார்களாம். 'இந்தியன் 2' படத்திற்கும் 'இந்தியன் 3' படத்திற்கும் இடையில் “கமல்ஹசான் 233' மட்டும் வெளியாகலாம் எனத் தெரிகிறது. 'இந்தியன் 3' படத்திற்குப் பிறகுதான் மணிரத்னம், கமல்ஹாசன் இணையும் 'கமல்ஹாசன் 234' வெளியாகலாம் என்கிறார்கள்.