சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு |

ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி தனது 25வது திரைப்படமாக 'ஜப்பான்' படத்தில் நடித்து வருகிறார். டிரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த வருட தீபாவளிக்கு இத்திரைப்படம் வெளியாகிறது. சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்த நிலையில் நேற்று ஜப்பான் படத்திலிருந்து ' டச்சிங் டச்சிங்' எனும் முதல் பாடலை வெளியிட்டுள்ளனர். அருண்ராஜா காமராஜ் எழுதிய இந்த பாடலை கார்த்தி மற்றும் இந்திரா சவுகான் இணைந்து பாடியுள்ளனர். இது கார்த்தி, அணு இமானுவேல் இடையே உள்ள ஜாலியான காதல் பாடலாக உருவாகியுள்ளது. பாடல் வெளியான 22 மணிநேரத்தில் 22 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது.




