மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

உலக புகழ்பெற்ற ஆஸ்கர் அகாடமியின் துணை அமைப்பான அகாடமி ஆப் மோஷன் பிக்சர்ஸ் அண்ட் ஆர்ட்ஸ் என்ற அமைப்பு முன்னணி தெலுங்கு நடிகரான ஜூனியர் என்டிஆரை தனது அமைப்பில் உறுப்பினராக சேர்த்துள்ளது. இந்த அமைப்பில் பிரபல ஹாலிவுட் நடிகர்கள், இயக்குனர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வரிசையில் ஜூனியர் என்டிஆரும் இடம் பெறுகிறார்.
இதுகுறித்து அகாடமி ஆப் மோஷன் பிக்சர்ஸ் அண்ட் ஆர்ட்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திரைத் துறையில் அர்ப்பணிப்பும், சேவையும் செய்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் கலைஞர்களை தேர்வு செய்து கவுரவிப்பது எங்களுக்கு பெருமை" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. ஜூனியர் என்.டி.ஆருக்கு கிடைத்திருக்கும் இந்த புதிய கவுரவம் அவரது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
தெலுங்கில் முன்னணி நடிகராக இருந்த ஜூனியர் என்டிஆர் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் மூலம் உலக புகழ்பெற்றார். அவர் ஆடிய ‛நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததன் மூலம் மேலும் புகழ் அடைந்தார். தற்போது கொரட்டலா சிவா இயக்கும் 'தேவரா' படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்கிறார். சைப் அலிகான் வில்லனாக நடிக்கிறார். இதனைத் தொடர்ந்து பிரசாந்த் நீல் இயக்கும் புதிய படத்தில் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்க உள்ளார்.