அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
வரலட்சுமி நடித்துள்ள வெப் தொடர் 'மேன்ஷன் 24'. தெலுங்கில் தயாராகி உள்ள இந்த தொடர் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி உள்ளது. இதில் வரலட்சுமியுடன் சத்யராஜ், அபிகா கவுர், பிந்து மாதவி, அர்ச்சனா ஜோஸிஸ், ஸ்ரீமன், ஜெயபிரகாஷ், அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஓம்கார் இயக்கி உள்ளார்.
சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் வரலட்சுமியின் தந்தை சத்யராஜ் மீது திடீரென பல்வேறு மோசடி புகார் கூறப்படுகிறது. இதையொட்டி அவர் காணாமல் போகிறார். இதனால் மீடியாக்களும், மக்களும் சத்யராஜ் பற்றி விமர்சிக்கிறது. தன் தந்தையை கண்டுபிடித்து, அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க துப்பறிவு பத்திரிகையாளரான வரலட்சுமி கிளம்புகிறார். தந்தை பற்றிய மர்மங்கள் ஒரு மேன்ஷனுக்குள் இருக்கிறது என்பதை கண்டுபிடித்து அங்கு சாதாரண குடிமகள் போல் செல்கிறார். அங்கு ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களில் தன் தந்தையை அவர் கண்டுபிடித்தாரா என்பதே கதை. பேய்களுடன் கூடிய ஹாரர் தொடராக தயாராகி உள்ளது.
“மேன்ஷன் 24 வெப் தொடரில் தந்தையை தேடி செல்லும் மகளாக நடித்துள்ளேன். நான் பேய்கள் இருக்கிறது என்றால் நம்பமாட்டேன். ஆனால் இந்த வெப் தொடரை பார்த்த பிறகு எனக்குள் பயம் ஏற்பட்டு உள்ளது. சத்யராஜ் சிறந்த நடிகர். அவருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. நான் வீட்டில் இரவு நேரத்தில் பேய் படங்கள் பார்க்க மாட்டேன். எனவே பகல் நேரத்திலேயே இந்த தொடரை பார்க்கிறேன்'' என்கிறார் வரலட்சுமி.