தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாக இசையமைப்பாளர் டி.இமான் குற்றம்சாட்டி இருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிவகார்த்திகேயன் செய்த துரோகத்தை சொன்னால் என் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று அவர் சொன்னது பல யூகங்களை உண்டாக்கியது.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து இமானின் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட் விளக்கமளித்துள்ளார். அது வருமாறு: சிவகார்த்திகேயன் எங்களின் குடும்ப நண்பர். எங்கள் குடும்பத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்ட மனிதர். எனக்கும் இமானுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டபோது நாங்கள் பிரிந்துவிடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் எங்களுக்கு இடையே சமாதானம் செய்து வைக்க எல்லாவிதமான முயற்சிகளையும் செய்தார்.
இமானோட விவாகரத்து முடிவுக்கு சிவகார்த்திகேயன் ஆதரவாக இல்லாதது பிடிக்கவில்லை. நியாயத்து பக்கம் நின்றார். ஒரு வருடத்திற்கு முன்பே பெண்ணையெல்லாம் பார்த்த பிறகு தான் இமான் எனக்கு விவாகரத்தே கொடுத்தார். நான் முடியாதுன்னு சொன்னதுக்கு அரசியல்வாதிகளை வைத்து உங்கப்பாவை கொன்னுடுவோம் என்று மிரட்டி 46 நாட்களிலே விவாகரத்தும் வாங்கினார்.
இமானுக்கு இப்போ பட வாய்ப்புகள் இல்லை. அதுனாலதான் இப்படி எல்லாம் பேசி விளம்பரம் தேடுகிறார். அது மூலமாக பட வாய்ப்புகளை பிடிக்க நினைக்கிறார். இந்த விஷயம் என்னை விட சிவகார்த்திகேயனை எந்தளவு பாதிக்கும் என்று அவர் யோசிக்கவில்லை. எங்களுக்கு நல்லது நினைத்த ஒருவருக்கு இப்படி ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதற்காக வருந்துகிறேன்.
இவ்வாறு மோனிகா கூறியுள்ளார்.