தமிழில் மிகவும் சுமாரான முன்பதிவில் 'குபேரா' | 'குட் வொய்ப்' வெப் தொடரில் வலுவான நாயகி கதாபாத்திரம்: இயக்குனர் ரேவதி | பிளாஷ்பேக்: தமிழில் வந்த முதல் உளவியல் திரைப்படம் | சிவகார்த்திகேயன் 24வது படம் : இயக்குனர் யார்? | பிக்பாக்கெட் குற்றங்களை விரிவாக பேசும் படம் | தமிழில் வெளியாகும் ஹாலிவுட் அனிமேஷன் படம் | திருமண ஆசை காட்டி மோசடி : சின்னத்திரை நடிகை ரிகானா மீது போலீசில் புகார் | ஐடி., ரெய்டு நடக்கும் உணவகம் என்னுடையது அல்ல : ஆர்யா பேட்டி | சிரஞ்சீவி 157வது படப்பிடிப்பில் இணைந்த நயன்தாரா | கர்ப்பமாக இருக்கும் கியாரா அத்வானிக்காக டாக்ஸிக் படப்பிடிப்பை மும்பைக்கு மாற்றிய யஷ் |
2000-ம் ஆண்டில் பாண்டியராஜன் இயக்கத்தில் பிரபு தேவா நாயகனாக நடித்த டபுள்ஸ் சென்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த் தேவா. அதன்பிறகு குத்து, குமரன் சன் ஆப் மகாலட்சுமி, ஜித்தன், சிவகாசி உள்பட ஏராளமான படங்களுக்கு இசையமைத்தார். தற்போது கருவறை என்ற குறும்படத்துக்கு இசை அமைத்ததற்காக தேசிய விருது பெற்றுள்ளார். 69வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீகாந்த் தேவா அளித்த பேட்டியில், ‛‛இந்த தேசிய விருது நான் இசையமைத்துள்ள கருவறை என்ற குறும்படத்திற்காக கிடைத்திருக்கிறது. இந்திய ஜனாதிபதி கையில் இந்த விருதை வாங்கியது மகிழ்ச்சியாகவும் பெருமையாக உள்ளது. இந்த விருதை இசையமைப்பாளரான எனது தந்தை தேவாவுக்கு அர்ப்பணிக்கிறேன். என் அப்பா ஏராளமான விருதுகள் வாங்கி இருக்கிறார். என்றாலும் நான் வாங்கியுள்ள இந்த விருதை அவர் சிறப்பாக நினைப்பார். மேலும், இதற்கு முன்பு கடந்த 20 ஆண்டுகளாக நான் இசையமைத்த எத்தனையோ படங்கள் என்னுடைய பெயர் போட்டு விருதுகளுக்கு சென்றுள்ளது. அப்போது விருது கிடைத்ததில்லை. ஆனால் இந்த படத்துக்கு இசையமைக்கும்போது விருது கிடைக்கும் என்ற எதிர்பார்க்கவே இல்லை. ஆனால் விருது கிடைத்திருக்கிறது என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் ஸ்ரீகாந்த் தேவா.