ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
'லியோ' படத்திற்கு அதிகாலை காட்சி வேண்டுமென நீதிமன்றத்தை நாடியது தயாரிப்பு நிறுவனம். ஆனால், அதற்கு அனுமதி அளிக்க முடியாது என மறுத்தது நீதிமன்றம். இருப்பினும் காலை 7 மணிக்கு காட்சிகளை அனுமதிக்க பரிசீலனை செய்யலாம் என தமிழக அரசை கேட்டுக் கொண்டது. அது பற்றி ஆலோசித்த தமிழக அரசு 7 மணிக்கு காட்சிகளை நடத்த அனுமதிக்க முடியாது, முன்னர் சொன்னபடி 9 மணிக்குதான் ஆரம்பமாகும் என திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
தயாரிப்பு நிறுவனம் கேட்ட காட்சி மாற்றத்தை தமிழகத் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏற்கெனவே காலை 9 மணி காட்சி முதல் டிக்கெட்டுகளை விற்றாகிவிட்டது. இப்போது மாற்றினால் தேவையற்ற குழப்பம் ஏற்படும், அதனால் வேண்டாம் என மறுத்துவிட்டார்கள். வேறு வழியில்லாமல் அவர்களது முடிவுக்குக் கட்டுப்பட்டது தயாரிப்பு நிறுவனம்.
இந்நிலையில் இப்படி சிறப்புக் காட்சிகள் குறித்து தேவையற்ற சர்ச்சை, பிரச்சனை, விவாதம் ஆகியவை எழாமல் இதற்கு நிரந்தரமாக ஒரு தீர்வை எட்ட வேண்டும் என திரையுலகினர் விரும்புவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
பண்டிகை நாட்களில் எத்தனை மணிக்குக் காட்சிகளை ஆரம்பிப்பது, எத்தனை காட்சிகளை நடத்துவது என தயாரிப்பாளர் சங்கம், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் ஆகியோர் ஆலோசித்து ஒரு முடிவை எட்டி, அதை அரசிடம் தெரிவித்து அதன்படி இனி வரும் காலங்களில் நடத்திக் கொள்ளலாம் என கருத்து தெரிவிக்கிறார்கள்.
இத்தனை மணிக்குத்தான் முதல் காட்சி ஆரம்பமாகும் என உறுதியாக அறிவித்துவிட்டால் ரசிகர்கள் தரப்பிலிருந்தும் தேவையற்ற சர்ச்சைகளை சமூக வலைத்தளங்களில் எழுப்ப மாட்டார்கள். அவர்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் வேலையும் நடக்காது என நினைக்கிறார்கள்.
'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு அரசு சார்பில் சம்பந்தப்பட்டவர்களை திரையுலகத்தைச் சேர்ந்தவர்களை அழைத்து இது பற்றி நிரந்தரமான ஒரு முடிவை அறிவிக்க வேண்டும் என்பது திரையுலகினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.