'ஹேப்பி ராஜ்' படப்பிடிப்பு நிறைவு | 'ஜனநாயகன்' தணிக்கை தாதமம், காரணம் என்ன ? | பிளாஷ்பேக்: மூன்று நட்சத்திரங்களின் திரைப் பிரவேசத்திற்கு வித்திட்ட “பட்டினப்பிரவேசம்” | மீண்டும் படம் இயக்க உள்ளேன்: பாக்யராஜ் பேட்டி | பராசக்தி பட சஸ்பென்ஸ் எது? | பிளாஷ்பேக் : ஜல்லிக்கட்டுக்கு சம்பந்தமில்லாத ஜல்லிக்கட்டு படம் | பிளாஷ்பேக்: முதல் 'ஜல்லிக்கட்டு' படம் | சண்டை காட்சியில் எஸ்.ஜே.சூர்யா படுகாயம் : கில்லர் படப்பிடிப்பு நிறுத்தம் | 'ஜனநாயகன்' பட்ஜெட் 500 கோடி: நீதிமன்றத்தில் தகவல் | விஜய் நடித்த 'உன்னை நினைத்து' காட்சிகளைப் பகிர்ந்த விக்ரமன் |

மம்முட்டி தற்போது நடித்து முடித்துள்ள படம் 'காதல்: தி கோர்'. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜோதிகா நடிக்கும் மலையாள படம். இதனை தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்கி உள்ளார். சாகு தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், மேத்யூஸ் புலிகன் இசை அமைத்துள்ளார். இந்த படம் இன்னும் தியேட்டரில் வெளியிடப்படவில்லை. அதற்கு முன்பாக கோவாவில் வருகிற நவம்பர் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்க உள்ள 54வது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.
இந்த படத்தில் ஜோதிகா மம்முட்டியின் மனைவியாக நடிப்பதாக கூறப்படுகிறது. திரிஷியம் பட பாணியில் பேமிலி சஸ்பென்ஸ் திரில்லராக படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்துடன் சேர்த்து கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட 26 படங்கள் தேர்வாகியுள்ளன. மேலும் 21 குறும்படங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.