சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

திரைப்பட நடிகையான சோனா ஹெய்டன் பல படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் தான் நடித்திருக்கிறார். சின்னத்திரையிலும் சோனா என்ட்ரி கொடுத்து ரோஜா, அபிடெய்லர், மாரி ஆகிய தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்தார். தற்போது தனது வாழ்க்கையை தழுவி ஸ்மோக் என்ற இணைய தொடரை இயக்கி வருகிறார்.
அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில், ‛‛கவர்ச்சி நடிகை என்ற பட்டத்தால் எனக்கு திருமணம் கூட ஆகவில்லை. அவள் அப்படிபட்டவள் தான் என்று தவறாக கூறினார்கள். ஆனால், நான் சாதரண பெண் தான். சமைப்பேன், வீட்டு வேலை செய்வேன். என் மீதிருந்த கவர்ச்சி நடிகை என்ற பெயரால் தான் எனக்கு திருமணமே ஆகவில்லை. அதை மாற்றதான் சீரியலில் கூட அம்மா கதாபாத்திரங்களில் நடித்தேன். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை என்று மிகவும் வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார்.
தான் இயக்கி வரும் ஸ்மோக் தொடரில் சினிமாவை பற்றிய உண்மைகளை தனது வாழ்வில் தனக்கு நடந்த வேதனை வலிகளை சொல்ல இருப்பதாக கூறியுள்ளார்.