ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவர்கள் சில வருடங்களிலேயே பிரிந்தனர். அதன்பின் இருவரும் அவர்களது பிரிவைப் பற்றி அதிகம் பேசிக் கொண்டதில்லை.
சமந்தா அவரது வலது இடுப்புப் பகுதியில் நாக சைதன்யாவின் செல்லப் பெயரான 'சாய்' என்று குறிக்கும் ஆங்கில எழுத்தை டாட்டூவாக வரைந்திருந்தார். அது பற்றி ஒரு பதிவிட்டும் அறிமுகப்படுத்தினார். அவரது முதுகுப் பக்கத்தில் அவரும், நாகசைதன்யாவும் இணைந்து நடித்த முதல் படமான 'ஏ மாய சேவவே' படத்தின் பெயரைக் குறிக்கும் வகையில் 'ஒய்எம்சி' என்ற ஆங்கில வார்த்தையை டாட்டூவாகப் போட்டுள்ளார். அடுத்து அவரது கையின் வலது மணிக்கட்டுப் பகுதியில் 'வைக்கிங் குறியீடு' என்று சொல்லப்படும் ஒரு டாட்டூவையும் வைத்துள்ளார். அதே போன்றதொரு டாட்டூவை நாகசைதன்யாவும் அவரது வலது மணிக்கட்டுப் பகுதியில் போட்டிருக்கிறார்.
சமந்தா நேற்று சில போட்டோஷுட் புகைப்படங்களை இன்ஸ்டா தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில் அவரது கணவர் பெயரை டாட்டூவாகக் குத்தியிருந்தது காணப்படவில்லை. அந்த டாட்டூவை அழித்துவிட்டாரா அல்லது போட்டோஷாப் மூலம் அதை நீக்கிவிட்டாரா என்பது தெரியவில்லை. 'சாய்' என்பதை மட்டும் அழித்தாரா அல்லது நாகசைதன்யாவுடன் தொடர்புடைய மற்ற இரண்டு டாட்டூக்களையும் அழித்துவிட்டாரா என்பதும் சந்தேகமாக உள்ளது.
சமந்தாவின் அசத்தலான புகைப்படங்களுக்கு லைக் போட்ட ரசிகர்கள் சிலர் இந்த சந்தேகத்தையும் எழுப்பியுள்ளனர்.




