ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி | 73வது பிறந்தநாளை கொண்டாடிய இசையமைப்பாளர் தேவா! | விடாமுயற்சி படத்தின் சிறு பிஜிஎம் வைரல் | சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சூர்யா - சிவா வழிபாடு | விவாகரத்து வழக்கு ; தனுஷ் - ஐஸ்வர்யா நேரில் ஆஜர் : பிரிவதில் இருவரும் உறுதி | விமர்சனங்கள், தியேட்டர் கருத்துக்கள்…தடுக்க முடியுமா? | ஏ.ஆர்.ரஹ்மான் குழுவிலிருந்த பெண் 'கிடாரிஸ்ட்' விவாகரத்து |
சின்னத்திரை, பெரிய திரை நடிகர் ஈ.வி.கணேஷ் பாபு நடித்து, இயக்கி உள்ள படம் 'கட்டில்'. சிருஷ்டி டாங்கே நாயகியாக நடித்துள்ளார், விதார்த், கன்னிகா சினேகன், கீதா கைலாசம், செம்மலர் அன்னம், உள்பட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார். வைட் ஆங்கிள் ரவிசங்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லெனின் திரைக்கதை எழுதி, எடிட்டிங் பணிகளை செய்துள்ளார்.
இந்த படம் தயாராகி ஒரு வருடத்திற்கு மேலாகி விட்டது. பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு சில விருதுகளையும் வென்றது. இந்த நிலையில் படம் நவம்பர் 24ம் தேதி தியேட்டர்களில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இயக்குனர் ஈ.வி.கணேஷ் பாபு கூறியதாவது: ஒரு கட்டில் 3 தலைமுறைகளை தாண்டி எப்படி பயணிக்கிறது என்பதுதான் படத்தின் கதை. நமது பழமையையும், கலாசாரத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று சொல்கிற படம். இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார். அவர்தான் எனது குறும்படத்திற்கும் இசை அமைத்தார். அந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது. இந்த படத்திற்கும் தேசிய விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஏற்கெனவே பல விருதுகளை வென்றுள்ள படம். இந்த படத்தில் நடித்தவர்கள் இப்போது பிசியான நடிகர்களாகி விட்டார்கள். கட்டில் தமிழ் சினிமாவில் முக்கியமான இடத்தை பிடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.