ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா | தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு | பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி | கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் மீண்டும் இணையும் 'லகான்' கூட்டணி | அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா? | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம் இந்த சூழ்நிலையில் நடக்குமா? | திருப்பதி கோயிலில் சமுத்திரக்கனி வழிபாடு : விஜய்க்கு வாழ்த்து | திருமாவளவனை மறைமுகமாக விமர்சித்த நடிகை சனம் ஷெட்டி | பிரேமலு காமெடி நடிகருடன் மமிதா பைஜு ஜோடியாக நடிக்கும் புதிய படம் துவக்கம் | பெத்தி படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் சுகுமாருடன் விசிட் அடித்த சிரஞ்சீவி |

நடிகர் அஜித்குமார் துணிவு படத்தின் வெற்றிக்குப் பிறகு கிட்டத்தட்ட 9 மாதங்கள் கழித்து தற்போது தனது அடுத்த படமான 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இதனை மகிழ் திருமேனி இயக்குகிறார். லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு துபாயில் உள்ள அஜர்பைஜான் எனும் பகுதியில் நடைபெற்று வருகிறது.
இதில் திரிஷா, ரெஜினா கசண்டரா என இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்த நிலையில் இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இதில் ஒரு கதாபாத்திரம் 50 வயதுக்கு மேல், மற்றொன்று இளைஞர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு அஜித் வாலி, வில்லன், வரலாறு, அட்டகாசம், பில்லா 1 ஆகிய படங்களில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இவை அனைத்தும் வெற்றி படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.