கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு | உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ள படம் 'லியோ'. இப்படத்திற்காக அதிகாலை 4 மணி காட்சி, காலை 7, 8, 9 மணி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் பல்வேறு முறைகளில் அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறது. தயாரிப்பாளர் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம், தியேட்டர்காரர்கள் சங்கம் என பல சங்கத்தினர் அதற்கு உதவி வருகிறார்கள் என கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
இந்த வருடத் துவக்கத்தில் 'துணிவு' படத்தின் சிறப்புக் காட்சி அதிகாலையில் நடந்த போது சென்னையில் அஜித் ரசிகர் ஒருவர் லாரி மீதிருந்து கீழே விழுந்து மரணமடைந்தார். அதன்பின் அதிகாலை காட்சிகளுக்கு அரசு தரப்பிலிருந்து அனுமதி வழங்கப்படுவதில்லை. 'லியோ' படத்தை தமிழகத்தில் 100 கோடிக்கும் அதிகமாக வியாபாரம் செய்துள்ளார்கள். அதிகாலை சிறப்புக் காட்சிகளை நடத்தினால் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்று சீக்கிரத்தில் வருவாய் ஈட்ட தியேட்டர்காரர்கள் நினைக்கிறார்களாம்.
ஒருவேளை அரசு தரப்பிலிருந்து அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றால் மாற்று திட்டம் ஒன்றையும் யோசித்து வருகிறார்களாம். ஒரு நாள் முன்னதாக அக்டோபர் 18ம் தேதியன்றே பிரிமீயர் காட்சிகள் என்ற பெயரில் இரவு 7 மணி, 9 மணி, 11 மணி என சிறப்புக் காட்சிகளை நடத்தலாமா என பேசி வருவதாகத் தகவல். அதன் மூலம் ஒரு நாள் முன்னதாகவே படத்தைப் பார்க்க ரசிகர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுத்து படத்தைப் பார்ப்பார்கள் என்று யோசிக்கிறார்களாம்.
இருப்பினும் வெளிநாட்டு உரிமை வாங்கியிருப்பவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகத் தகவல். தமிழகத்தில் ஒரு நாள் முன்னாடியே படத்தைப் பார்த்தால் அது தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்களாம். இருந்தாலும் தமிழக வசூல் மிகவும் முக்கியம் என்பதால் அதை காதில் போட்டுக் கொள்ள வேண்டாம் என இங்குள்ள தியேட்டர்காரர்கள் சொல்கிறார்களாம். எனவே, அரசு அதிகாலைக் காட்சிக்கு அனுமதி இல்லை என்றால் முன்தினமே காட்சிகள் நடக்கலாம் என்பதே இப்போதைய தகவல்.