சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
ஜெயிலர் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக தான் நடித்து வந்த லால் சலாம் படத்தின் படப்பிடிப்பையும் முடித்து விட்டார் நடிகர் ரஜினிகாந்த். அந்த படத்தில் அவர் ஒரு சிறப்பு தோற்றத்தில் மட்டுமே நடிக்கிறார். அதைத் தொடர்ந்து அடுத்ததாக ஜெய்பீம் இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் தனது 170வது படத்தில் தற்போது நடித்து வருகிறார் ரஜினிகாந்த் இந்த படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இடம்பெற்றுள்ளது. ரஜினிகாந்த் நடித்த 2.0, தர்பார் ஆகிய படங்களை தயாரித்த லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது.
இன்னொரு பக்கம் சோசியல் மீடியாவில் இப்போதிருந்தே ஒரு தரப்பினர் இந்த படத்திற்கான தங்களது எதிர்ப்பினை "வன்னியர் பாய்காட் ரஜினிகாந்த்" என்கிற ஹேஷ்டேக் மூலமாக வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த கோபம் நேரடியாக ரஜினிகாந்த் மீது இல்லை. இந்த படத்தை இயக்கும் டிஜே ஞானவேல் மீதுதான்.
ஏற்கனவே அவர் இயக்கிய ஜெய் பீம் படத்தில் தங்களது வன்னியர் சமுதாயத்தை பற்றி தவறான பிம்பம் ஏற்படுத்தும் விதமாக சில கதாபாத்திரங்களை புகுத்தி சில சர்சசை கருத்துக்களையும் கூறியதாக அந்த படம் வெளியான சமயத்திலேயே மிகப்பெரிய சர்ச்சை எழுந்தது.
தற்போது அந்த இயக்குனரின் படத்தில் ரஜினிகாந்த் நடிப்பதால் இப்போது புதிதாக இப்படி ஒரு எதிர்ப்பு தலைதூக்கி உள்ளது. ஜெய்பீம் படத்தில் நடைபெற்ற நிகழ்வுகளுக்காக டிஜே ஞானவேல் தனது தரப்பிலிருந்து வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் இந்த படத்தை வன்னிய சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ரிலீசாகும்போது புறக்கணிக்க வேண்டும் என்றும் சோசியல் மீடியாவில் சில தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அதே சமயம் இந்த படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனத்தின் தமிழக சிஇஓ ஆக வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர்களில் ஒருவரான ஜி கே மணியின் மகன் ஜி கே எம் தமிழ் குமரன் இருப்பதால் இந்த எதிர்ப்புகளை எல்லாம் ரிலீஸ் ஆகும் நேரத்தில் அழகாக சமாளித்து விடலாம் என படக்குழுவினர் நம்பிக்கையுடன் இருப்பதாக சொல்லப்படுகிறது.