எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
தெலுங்கு திரையுலகில் இளம் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன். தென்னிந்திய அளவில் பிரபலமாக இருக்கும் அல்லு அர்ஜுன் கடந்த சில வருடங்களில் யூடியூப்பில் அவரது படங்கள் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால் பாலிவுட்டிலும் தெரிந்த முகமாக மாறிவிட்டார். குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான புஷ்பா திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றி வெளிநாடுகளிலும் அவருக்கு ரசிகர் வட்டத்தை உருவாக்கி விட்டது.
சமீபத்தில் புஷ்பா படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்ற முதல் தெலுங்கு நடிகர் என்கிற பெருமையும் அல்லு அர்ஜுனுக்கு சேர்ந்து கொண்டது. இந்த நிலையில் இன்னொரு சிறப்பம்சமாக அவரது மெழுகுசிலை துபாயில் உள்ள மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் விரைவில் இடம்பெறப் போகிறது. இந்த சிலையை செய்ய தேவைப்படும் அல்லு அர்ஜுனின் 200 விதமான புகைப்படங்கள் மற்றும் அளவுகள் ஆகியவை சமீபத்தில் சிலை வடிவமைப்பாளர்களால் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ள அல்லு அர்ஜுன், "நான் சிறுவயதாக இருக்கும்போது இந்த மியூசியத்திற்கு வந்துள்ளேன். ஆனால் நானே இங்கே சிலையாக இடம் பெறப்போகிறேன் என நினைத்துக்கூட பார்த்தது இல்லை" என்று கூறியுள்ளார்.