ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பிரபல பின்னணி பாடகி சின்மயி பாடல்கள் பாடுவது மட்டுமல்லாமல் முன்னணி கதாநாயகிகள் பலருக்கும் டப்பிங்கும் பேசி வந்தார். ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ‛மீ டூ' விவகாரம் மூலம் பாடலாசிரியர் வைரமுத்துவுடன் ஏற்பட்ட உரசல் காரணமாக இவருக்கு தமிழில் டப்பிங் பேச மறைமுக தடை விதிக்கப்பட்டு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வந்தது. இதனால் தெலுங்கில் மட்டுமே இவர் பணியாற்றும் சூழல் இருந்தது. இந்த நிலையில் அவர் மீது விதிக்கப்பட்ட மறைமுக தடையை உடைக்கும் விதமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து தான் இயக்கியுள்ள லியோ திரைப்படத்தில் திரிஷாவுக்காக சின்மயியை டப்பிங் பேச வைத்துள்ளார்.
இதுகுறித்த தகவலை தற்போது மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ள சின்மயி, ‛‛திரிஷாவுக்காக தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் டப்பிங் பேசியுள்ளேன். இதுபோன்ற ஒரு துணிச்சலான நிலைப்பாட்டை எடுத்ததற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பாளர் லலித் குமார் ஆகியோருக்கு மில்லியன் தடவை நன்றியுடையவளாக இருப்பேன்'' என்று கூறியுள்ளார். சின்மயியின் இந்த பதிவுக்கு தன் பங்கிற்கு திரிஷாவும் நன்றி தெரிவித்துள்ளார்.