அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
தமிழ்த் திரையுலகில் '2.0, பொன்னியின் செல்வன்' உள்ளிட்ட பிரம்மாண்டப் படங்களையும், “கத்தி, கோலமாவு கோகிலா, வட சென்னை, டான்” உள்ளிட்ட வெற்றிப் படங்களையும் தயாரித்த நிறுவனம் லைக்கா புரொடக்ஷன்ஸ். தற்போது தமிழில் 'இந்தியன் 2, லால் சலாம்' உள்ளிட்ட படங்களைத் தயாரித்து வருகிறார்கள்.
தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கில், “கைதி நம்பர் 150”, ஹிந்தியில் ‛‛குட்லக் ஜெர்ரி, ராம் சேது'' ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார். தற்போது 'லூசிபர் 2' படத்தின் மூலம் மலையாளத் திரையுலகிலும் நுழைந்துள்ளார்கள்.
“எல் 2 இ - எம்புரான்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது லைக்கா. பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், பிருத்விராஜ், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
லைக்கா நிறுவனம் மலையாளத் திரையுலகில் வருவதற்கு படத்தின் கதாநாயகன் மோகன்லால் வரவேற்பு தெரிவித்து, “மலையாளத் திரையுலகத்திற்கு 'எல்2இ - எம்புரான்' படம் மூலம் வரும் லைக்கா புரொடக்ஷன்ஸை எல் டீம் சார்பாக வரவேற்பதில் மகிழ்ச்சி,” என்று குறிப்பிட்டுள்ளார். இப்படத்தை மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிட உள்ளார்கள்.