மேலிடத்து உத்தரவு... கால்ஷீட் தராத தனுஷ் : தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | கண்ணப்பா ரிலீஸ் தள்ளிப்போனது : காரணம் இது தான் | விஷாலுக்கு ஜோடியாகும் துஷாரா விஜயன் | 'பேடி' படத்தின் புதிய அப்டேட் | தொடரும் பூரி ஜெகன்னாத், சார்மி தயாரிப்பு நட்பு : விஜய் சேதுபதி ஹீரோ | ஷங்கர் அடுத்து 'அவுட்டேட்டட்' பட்டியலில் இணைந்த ஏஆர் முருகதாஸ் | சர்தார் 2 - யுவனுக்குப் பதிலாக சாம் சிஎஸ் | எல் 2 எம்புரான் - 2 நிமிடக் காட்சிகள் நீக்கம் | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் |
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பகல் நிலவு' மற்றும் ஜீ தமிழ் சீரியலான 'றெக்க கட்டி பறக்குது மனசு' ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமானவர் சமிரா ஷெரீப். பகல் நிலவு தொடரில் தன்னுடன் நடித்த சக நடிகரான சயத் அன்வரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் சீரியல் பக்கம் நடிக்க வராத சமீரா அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். தற்போது நல்லதொரு தாயாக குழந்தையை வளர்த்து வரும் சமீரா, உடல் எடை அதிகரித்து காணப்படுகிறார். இதற்கிடையில் அவரை மீண்டும் நடிக்க சொல்லி ரசிகர்கள் வற்புறுத்தி வர, ஜிம்மில் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். அவரது வேகத்தை பார்த்தால் இரண்டே மாதத்தில் பழைய சமீராவாக சீரியலில் கமிட்டாவார் என ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.