பீதியில் புரோட்டா காமெடியன் | 'டீசலுக்கு' வரவேற்பு உண்டு வருவாய் இல்லை: இயக்குனர் சண்முகம் | பிளாஷ்பேக்: திரைப் பிரபலங்களின் மாற்றத்திற்கு காரணியாய் இருந்த “ஸ்ரீமுருகன்” | ரசிகர் கொலை வழக்கில் நவ-6ல் நடிகர் தர்ஷன் உள்ளிட்ட அனைவரிடமும் வீடியோ கான்பரன்ஸ் விசாரணை | கேரள மாநில திரைப்பட அகாடமி தலைவராக ரசூல் பூக்குட்டி தேர்வு | லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் |

தெலுங்கில் 'அர்ஜூன் ரெட்டி' படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிக்கும் ஹிந்தி படம் 'அனிமல்'. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் அனில் கபூர், பாபி தியோல், சுரேஷ் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி-சிரீஸ், சினி ஒன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் டிசம்பர் 1ம் தேதி வெளிவருகிறது. ரன்பீர் கபூரின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.
இந்த படம் அப்பா அனில் கபூருக்கும், மகன் ரன்பீர் கபூருக்கும் இடையிலான உறவை ஆக்ஷன் களத்தில் சொல்கிறது என்பதை டீசர் மூலம் அறிய முடிகிறது. ரன்பீர் கபூரின் மனைவியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சாக்கெலட் பாயாக, அப்பாவிடம் அடிவாங்கும் மகனாக அறிமுகமாகும் ரன்பீர் கபூர், அதன் பிறகு தாடி வளர்த்து கொண்டு 'பீஸ்ட்' மோடுக்கு மாறுகிறார். அப்பாவியான ரன்பீர் கபூர் ஏன் அனிமலாக மாறுகிறார் என்பது தான் படத்தின் கதை என்று அறிய முடிகிறது. டீசர் பெரும் வரவேற்புடன் பகிரப்பட்டு வருகிறது.




