அஜித் தோவல் வேடத்தில் மாதவன் | திருமணம் குறித்து ஸ்ருதிஹாசன் சொன்ன பதில் | விஷ்ணு விஷால் மகளுக்கு ‛மிரா' என பெயர் சூட்டிய அமீர்கான் | என்னது நான் ஹீரோவா... : டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் மறுப்பு | மாமன் படத்தை பின்பற்றும் '3BHK' | கல்லூரிகளில் படத்தை புரொமோஷன் செய்ய விருப்பமில்லை : சசிகுமார் | ரன்வீர் சிங் ஜோடியான சாரா அர்ஜுன் | 100 நாடுகள், 10 ஆயிரம் ஸ்கிரீன், 1000 கோடி சாதனை படைக்குமா ரஜினியின் கூலி | விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் |
ஆல்பா பிரேம்ஸ் சார்பில் இயக்குனர் அறிவழகன் மற்றும் 7ஜி பிலிம்ஸ் சிவா இணைந்து தயாரிக்கும் படம் 'சப்தம்'. அறிவழகன் இயக்குகிறார். ஈரம், வல்லினம், ஆறுவது சினம், குற்றம் 23 படங்களை இயக்கிய அறிவழகன் இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராகி இருக்கிறார். தனது முதல் பட ஹீரோவான ஆதியுடன் இவர் மீண்டும் இணைந்திருக்கும் படம்தான் 'சப்தம்'. இதில் ஆதியுடன் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஈரம் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஹாரர் திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது இப்ப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். விரைவில் சப்தம் படத்தின் போஸ்டர், டீஸர் மற்றும் டிரெய்லர் பற்றிய அறிவிப்புகளை படக்குழுவினர் வெளியிட இருக்கிறார்கள்.