காதலி ஷீத்தலை பிரிந்த பப்லு! | துபாய் வீட்டில் கிருஷ்ண கீர்த்தனை நடத்திய ஏ.ஆர்.ரகுமான்! வைரலாகும் வீடியோ!! | 46 வயதாகும் ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதாவை மணந்தார்! | அடுத்த ஆண்டு ஏப்ரலில் துப்பறிவாளன்-2 படப்பிடிப்பு தொடக்கம்! | கவின், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் புதிய கூட்டணி! | சலார் படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ்? | “மதிமாறன்” பர்ஸ்ட் லுக் வெளியீடு | டிவி நடிகர் சித்து நாயகனாக அறிமுகமாகும் 'அகோரி' | மீண்டும் சர்ச்சை: 'வாடிவாசல்' சூர்யா நடிப்பாரா அல்லது விலகுவாரா? | டிசம்பர் 15ல் 8 புதிய படங்கள் ரிலீஸ் |
சுப்ரமணியபுரம் படத்தில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை ஸ்வாதி, தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் நடித்து வந்தார். கடந்த 2018ல் விகாஸ் வாசு என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார் ஸ்வாதி. இந்த நிலையில் இவருக்கும் கணவர் விகாஸுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளனர் என்றும் கடந்த சில மாதங்களாகவே சோசியல் மீடியாவில் செய்திகள் வெளியாகி வந்தன. ஸ்வாதி தனது சோசியல் மீடியா பக்கத்தில் இருந்த தனது கணவரின் புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கினார் என்பதும் இதற்கு காரணமாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில் ஸ்வாதி நடிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ள 'மந்த் ஆப் மது' என்கிற படம் வரும் அக்டோபர் 6ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்வாதியிடம் உங்கள் கணவருடனான விவாகரத்து செய்தி உண்மையா, இல்லையா ? இதுபற்றி உங்கள் விளக்கம் என்ன என கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஸ்வாதி, “இதுபற்றி நான் எதுவும் சொல்லப் போவதில்லை. நான் 16 வயதிலேயே சினிமாவிற்கு வந்து விட்டேன். சினிமாவில் எப்படி நடந்து கொள்வது, பேசுவது என்பது எனக்கு அவ்வளவாக அப்போது தெரியவில்லை. இப்போது ஒரு தொழில் முறை நடிகராக எல்லாவற்றுக்கும் நானே சில விதிமுறைகளை வகுத்துள்ளேன். அதன்படி இந்த விஷயத்திற்கும் இப்போது நடைபெறும் நிகழ்வுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அது மட்டுமல்ல நான் என்னுடைய பர்சனல் வாழ்க்கையைப் பற்றி எதுவும் சொல்லப் போவதில்லை. அதனால் உங்கள் கேள்விக்கு நான் பதில் அளிக்க போகவில்லை” என்று கூறியுள்ளார்.