
கேப்டன் மில்லர் படத்தில் இணைந்த லைகா
செப் 26, 2023
Advertisement
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் படம் "கேப்டன் மில்லர்". இதில் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், ஜான் கொக்கைன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வருகின்ற டிசம்பர் 15ம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் பணிகள் நடைபெற்று வருவதால் இதன் பிஸ்னஸ் இப்போது தொடங்கியது. முதற்கட்டமாக இந்த படத்தின் ஓவர்சீஸ் (வெளிநாட்டில்) லைகா நிறுவனம் வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும், இதன் உரிமை விலை ரூ. 10 கோடியை தாண்டியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் பரப்பாக பேசப்படுகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!