பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

தெலுங்கில் ஷங்கர் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடித்து வரும் படம் 'கேம் சேஞ்சர்'. கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது. கடந்த இரண்டு வருடங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு எப்போது முடியும் என ராம் சரண் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
கடந்த வாரம் இப்படத்தின் முக்கிய சண்டைக் காட்சிகளின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் ஆரம்பமாகி நடக்க வேண்டியிருந்தது. ஆனால், பின்னர் அது ரத்து செய்யப்பட்டது. படத்தில் நடிக்க வேண்டிய சிலரது தேதிகள் கிடைக்கவில்லை என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் படத்தின் கதாநாயகன் ராம் சரணுக்கு முகத்தில் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், டாக்டர் அவரை பத்து நாட்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளச் சொன்னதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து அடுத்த மாதத்திற்கு படப்பிடிப்பைத் தள்ளி வைத்துள்ளார்களாம். அடுத்த வருட கோடை விடுமுறைக்காவது இப்படம் வெளிவருமா என்று காத்திருக்கிறார்கள். படப்பிடிப்பு தள்ளிப் போவதால் வெளியீடும் மேலும் சில மாதங்கள் தள்ளிப் போகலாம் என்கிறார்கள்.