சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

சில மாதங்களுக்கு முன்பு பிரபாஸ் நடிப்பில் ஹிந்தியில் வெளியான படம் ஆதிபுருஷ். ராமாயணத்தை தழுவி ஓம்ராவத் இயக்கிய இந்த படத்தில் ராமனாக பிரபாஸும் அவரது மனைவி சீதாவாக பாலிவுட் நடிகை கிர்த்தி சனோனும் நடித்திருந்தனர். இதில் சீதாவாக கிர்த்தி சனோனின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது ஒரு தயாரிப்பாளராகவும் மாறி உள்ள கிர்த்தி சனோன் ப்ளூ பட்டர்பிளை பிலிம்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி முதல் படமாக 'டு பட்டி' என்கிற படத்தை தயாரித்து வருகிறார்.
பிரபல பாலிவுட் கதாசிரியரான கனிகா தில்லானும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார். சசாங்கா சதுர்வேதி இந்த படத்தை இயக்குகிறார். படத்தில் கதாநாயகியாக கிர்த்தி சனோன் நடிக்க முக்கிய வேடத்தில் நடிகை கஜோல் நடிக்கிறார். சமீப நாட்களாக உத்தரகண்ட் மாநிலத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இதையடுத்து கிர்த்தி சனோன் மற்றும் கனிகா தில்லான் இருவரும் மரியாதை நிமித்தமாக உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி மற்றும் அவரது மனைவி கீதா ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பு குறித்து கிர்த்தி சனோன் கூறும்போது ,‛உத்தரகண்ட் மாநிலம் படப்பிடிப்பு நடத்துவதற்கு ஏற்ற அழகான சுற்றுலா அம்சங்களுடன் கூடிய மாநிலமாக மாறி வருகிறது' என்று தனது பாராட்டுக்களை உத்தரகண்ட் முதல்வருக்கு தெரிவித்துள்ளார்.