பாரதிராஜா மறைவிற்கு திரை பிரபலங்கள் இரங்கல் | ரஜினி, கமல் எனும் இரு சூப்பர் ஸ்டார்களை உருவாக்கிய பாரதிராஜா | பாரதிராஜா மறைவு; முதல்வர், திரையுலகினர் அஞ்சலி | தமிழ் சினிமாவை புரட்டி போட்ட பாரதிராஜா... | இயக்குனர் பாரதிராஜா காலமானார் | அனைவரும் மறந்து போன 'இந்தியன் 3' | ஜூன் 19ல் 'ஜில்லா, மெர்சல்' ரீ ரிலீஸ்: விஜய் ரசிகர்களுக்கு 'டபுள்' ட்ரீட் | இந்த மாதம் வெளியாகும் தனுஷ் 55 பட தலைப்பு, முதல் பார்வை | இரண்டு சூப்பர் படங்களை மிஸ் செய்த தேஜூ அஸ்வினி | வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் |

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி நடித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம் 'விடுதலை'. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். விமர்சனங்கள் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை இப்படம் பெற்றது. தற்போது விடுதலை 2ம் பாகத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் பிரதானமாக விஜய் சேதுபதி கதாபாத்திரத்திற்கு நிறைய முக்கியத்துவம் உள்ளது. இதில் விஜய் சேதுபதி சம்மந்தப்பட்ட ப்ளாஷ் பிளாக் காட்சிகளில் சில முக்கிய நடிகர்கள் நடித்து வருவதாக தகவல் வெளியான நிலையில் இப்போது நடிகை மஞ்சு வாரியர் மற்றும் நடிகர் அட்டகத்தி தினேஷ் ஆகியோர் இணைந்து நடித்து வருவதாக கூறப்படுகிறது.