பிப்ரவரி மாதத்தில் மோதும் விக்ரம், சூர்யா படங்கள் | பிரம்மயுகம் படத்திற்கு ஆஸ்கர் அங்கீகாரம் | 'பராசக்தி' என் கேரியரில் மறக்க முடியாத படம் : ஸ்ரீலீலா மகிழ்ச்சி | நடிகை ஆன கபடி வீராங்கனை | பிளாஷ்பேக : சிற்பி மனதில் ஏற்பட்ட காயம் | பிளாஷ்பேக்: ஹீரோவின் தந்தையாக நடித்த சிவாஜி | துரந்தர் பட பிரமாண்ட வெற்றி : சிஷ்யனை பாராட்டிய இயக்குனர் பிரியதர்ஷன் | 23 ஆண்டுகள் கழித்து ஒக்கடு பட இயக்குனருடன் இணைந்த பூமிகா | தி ராஜா சாப் : ஆச்சரியப்படுத்திய அம்மு அபிராமி.. அதிர்ச்சி கொடுத்த கயல் ஆனந்தி | தனுஷ் 54வது படத்தின் டப்பிங் பணி துவங்கியது |

கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டில் உருவான திரைப்படம் 'துருவ நட்சத்திரம்'. பல காரணங்களால் இப்படம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது படம் ரிலீஸிற்கு தயாராகி வருகிறது. இதில் ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சதீஷ் கிருஷ்ணன், சிம்ரன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். சமீபகாலமாக இந்த படத்தை திரைக்கு கொண்டு வர தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று இந்த படத்திற்கு சென்சாரில் ' யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளனர் மேலும், நாளை (23.09.23) இதன் முக்கிய அப்டேட் வெளியிடுவதாக படக்குழுவினர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அனேகமாக படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அப்டேட்டாக இருக்கலாம்.