ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
பிரபல சின்னத்திரை நடிகரான கார்த்தி தற்போது வானத்தைப் போல என்ற தொடரில் ராஜபாண்டி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சீரியலில் துளசியை உருகி உருகி காதலிக்கும் கார்த்தி தனது நிஜ வாழ்விலும் காயத்ரி என்ற பெண்ணை அதையும் விட உருக்கமாக காதலித்து வருகிறார். பிரபல மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டான காயத்ரி பல சின்னத்திரை பிரபலங்களுடன் இணைந்து பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற விருதுகள் நிகழ்ச்சி மேடையில் வைத்து கார்த்தி தனது காதலி காயத்ரிக்கு ஓப்பனாக லவ் ப்ரொபோஸ் செய்தார். அப்போதே இந்த ஜோடிக்கு எப்போது திருமணம் என ரசிகர்கள் கேட்டு வந்தனர். இந்நிலையில், கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி கார்த்தி - காயத்ரியின் நிச்சயதார்த்தம் கோலாகலமாக முடிந்துள்ளது. இதனையடுத்து சக நடிகர்கள், ரசிகர்கள் என பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.