‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் | பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி | ரஜினி பிறந்தநாளில் “படையப்பா” ரிட்டர்ன்ஸ் | இண்டிகோ விவகாரத்தில் விமான ஊழியர்களை திட்டாதீர்கள் : சோனு சூட் ஆதரவு குரல் | பிரித்விராஜூக்கு தாத்தாவாக நடிக்கும் மோகன்லால் | ஜப்பானில் ரசிகர்களுடன் பாகுபலி தி எபிக் படத்தை பார்த்து ரசித்த பிரபாஸ் | வருட இறுதியில் நிவின்பாலிக்கு டபுள் ஜாக்பாட் |

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஜஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 'லால் சலாம்' படத்தை இயக்கியுள்ளார். நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் இதில் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். இவர்களுடன் இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு ரோலில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க,லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ரஜினிகாந்த் தனக்கான டப்பிங் பணிகளை முடித்துள்ளார் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளனர். மேலும், இந்த டப்பிங் வீடியோவில் ரஜினி " மதத்தையும், நம்பிக்கையும் மனசுல வை மனித நேயத்தை அதுக்கு மேலே வை அதுதான் நமது நாட்டின் அடையாளம் " என வசனம் பேசியுள்ளார். இந்த வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.