32 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ரஜினி - அமிதாப் கூட்டணி : வந்தாச்சு அறிவிப்பு | ரஜினி படத்தில் இணைந்தார் பஹத் பாசில் | ரிபெல் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | எனக்கு யார் அறிவுரையும் தேவையில்லை : எதிர்நீச்சல் நந்தினி | இளமை ததும்பும் ஸ்ருதி ராஜ் லேட்டஸ்ட் கிளிக்ஸ் | ஜாலியாக ஊர்சுற்றும் சின்னத்திரை த்ரீ ரோஸஸ் | ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் | மீண்டும் வந்தார் ‛புன்னகை பூ' கீதா | சித்தா படத்திற்கும், காவிரி பிரச்னைக்கும் தொடர்பில்லை : சித்தார்த் | இரட்டை சகோதரிகள் கதாநாயகியாக வெற்றி |
நடிகர் சிரஞ்சீவி நடித்து கடைசியாக வெளிவந்த ' போலா சங்கர்' திரைப்படம் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து சிரஞ்சீவி 157வது படத்தை மல்லிடி வசிஷ்டா இயக்குகிறார். இந்த படத்தை யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என சமீபத்தில் அறிவித்தனர். இதில் கதாநாயகியாக நடிக்க நடிகை அனுஷ்கா ஷெட்டி ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேண்டஸி கதை களத்தில் உருவாகும் இதன் படப்பிடிப்பு வருகின்ற நவம்பர் மாதத்திலிருந்து துவங்குகிறது என்கிறார்கள்.
இதற்கு முன் சிரஞ்சீவி படங்களில் சிறப்பு வேடங்களில் மட்டுமே நடித்துள்ள அனுஷ்கா முதன்முறையாக சிரஞ்சீவி உடன் முழுநீள படத்தில் நடிக்க போகிறார். முன்னதாக இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க த்ரிஷா மற்றும் சோனாக்ஷி சின்ஹா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஆனால் இப்போது அனுஷ்கா தேர்வாகி உள்ளாராம்.