'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி |
நடிகை நயன்தாரா திருமணம், குழந்தைகளுக்கு பிறகு சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தாண்டு நயன்தாரா நடிப்பில் முதல் வெளியீடாக ஹிந்தி படமான ‛ஜவான்' வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்து, தமிழில் ஜெயம் ரவி உடன் நடித்துள்ள ‛இறைவன்' படம் வெளியாக உள்ளது. தற்போது டெஸ்ட் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவரின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அறிமுக இயக்குனர் ப்ளாக் ஷிப் டுயுட் விக்கி இயக்கும் இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா, யோகி பாபு நடிக்கின்றனர். ‛கோலமாவு கோகிலா' படத்திற்கு பின் இருவரும் இணைந்து இந்த படத்தில் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு 'மண்ணாங்கட்டி' என பெயரிட்டு, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று(செப்., 18) இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். சான் ரோல்டன் இசையமைக்க, பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.