பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

கல்யாண வீடு தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் சிவன்யா ப்ரியங்கா. ரசிகர்களால் சிடுமூஞ்சி சிவன்யா என்று செல்லமாக அழைக்கப்படும் இவர், வில்லி கதாபாத்திரங்களில் கச்சிதமாக பொருந்தி நடித்து வருகிறார். தற்போது செவ்வந்தி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சிவன்யா, சினிமாவிலும் அறிமுகமாகவுள்ளார்.
நடிகர் ஸ்ரீகாந்த் நடிக்கும் புதிய படத்தில் சிவன்யா ப்ரியங்கா முக்கிய ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சிவன்யா ப்ரியங்கா ஷூட்டிங் ஸ்பாட்டில் ஸ்ரீகாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து புதிய தொடக்கம் என மகிழ்வுடன் பகிர்ந்துள்ளார். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




