சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி |
கமலை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வரும் ஷங்கர் மற்றொருபுறம் தெலுங்கில் ராம் சரணை வைத்து ‛கேம் சேஞ்சர்' என்ற படத்தையும் இயக்கி வருகிறார். கியாரா அத்வானி, அஞ்சலி, ஜெயராம், சுனில் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். தமன் இசையமைக்க, தில் ராஜூ தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. பிரமாண்ட பட்ஜெட்டில் அரசியல் கதைகளத்தில் உருவாகும் இந்த படத்தில் பாடல் காட்சிகளுக்காக மட்டும் ரூ.100 கோடி செலவு செய்கின்றனர்.
இந்த படத்தில் இருந்து பாடல் ஒன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகும் முன்பே சமூகவலைதளங்களில் லீக் ஆகி படக்குழுவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை பலரும் சமூகவலைதளங்களில் வைரலாக பரப்பி உள்ளனர். கோடிகள் போட்டு எடுக்கப்பட்டு வரும் படத்தின் பாடலை இப்படி ஒரு நொடியில் லீக் செய்து விட்டார்களே... என இயக்குனர் ஷங்கர், தயாரிப்பாளர் தில் ராஜூ உள்ளிட்ட படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
இதனிடையே இந்த பாடலை வெளியிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தயாரிப்பாளர் தில் ராஜூ ஐதராபாத் சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார். மேலும் இந்த லீக் ஆடியோவை பரப்பும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள தில் ராஜூ, சமூகவலைதளத்தில் அதை உடனடியாக நீக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.