படத்தில் நடிக்கும் அனைவருக்கும் 'ஸ்கிரிப்ட்' கொடுக்க வேண்டும்: விக்ரம் பிரபு வேண்டுகோள் | நாயகியான செய்தி வாசிப்பாளர் | புதிய கதையில் வெளிவரும் 'ஜூராசிக் பார்க்' | பிளாஷ்பேக்: விஜயகாந்த் படத்தில் ஆட மறுத்த சில்க் ஸ்மிதா | பிளாஷ்பேக்: எம்ஜிஆரை வாடா, போடா என்று அழைத்த ஒரே இயக்குனர் | 'குபேரா' முதல் நாள் வசூல்: முதற்கட்டத் தகவல் | 'ஆர்ஜேபி' என பெயரை சுருக்கிய ஆர்ஜே பாலாஜி | முன்னாள் கணவருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய கரிஷ்மா கபூர் | 'பராசக்தி' படப்பிடிப்பு விரைவில் மீண்டும் ஆரம்பம்? | விஜய் ஆண்டனியின் 'மார்கன்' படத்துக்கு யு/ஏ சான்றிதழ்! |
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு படம் திரைக்கு வந்து ஒன்பது மாதங்கள் ஆகிவிட்டன. அதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் தனது 62வது படத்தில் நடிக்க இருந்தார் அஜித். ஆனால் கதையில் ஏற்பட்ட சில பிரச்சனை காரணமாக அவர் விலகினார். பின்னர் அஜித்தின் 62வது படத்தை மகிழ்திருமேனி இயக்குவதாக அறிவித்தனர். அந்த படத்துக்கு விடாமுயற்சி என்று டைட்டில் வைக்கப்பட்டு ஆரம்பகட்ட பணிகளில் இறங்கினார் மகிழ்திருமேனி.
அப்போதெல்லாம் அஜித்குமார் வெளிநாடுகளுக்கு சென்று பைக் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் இம்மாதம் இறுதியில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் இந்த நேரத்தில் தற்போது அஜித்குமார் ஓமன் நாட்டில் பைக் சுற்று பயணம் செய்து வரும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன. தொடர்ந்து அரபு நாடுகள் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றும் கூறப்படுகிறது. அதனால் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் இறுதியில் தொடங்குமா? இல்லை இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இன்னும் சில மாதங்கள் ஆகுமா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.