பாலிவுட்டில் அறிமுகமாகும் மீனாட்சி சவுத்ரி | லோகா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு | 'ஓஜி' வரவேற்பு : ஸ்ரேயா ரெட்டி மகிழ்ச்சி | குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் தரிசனம் செய்த தனுஷ் | துபாயில் சொகுசு கப்பலா... : மாதவன் கொடுத்த விளக்கம் | அருண் விஜய் படத்திற்கு முதல் விமர்சனம் தந்த தனுஷ் | சரஸ்வதி படத்தின் மூலம் இயக்குனர் ஆகும் நடிகை வரலட்சுமி | சாந்தனுவின் ஏக்கம் தீருமா | 'கந்தாரா சாப்டர் 1' போட்டியை சமாளிக்குமா 'இட்லி கடை' | ஹிந்தி பிக்பாஸ் சீசன் 19 நிகழ்ச்சியின் மீது 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு |
இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தன்னை பற்றி வதந்தி பரப்பிய ஒரு சகோதரி மீது மான நஷ்ட வழக்கு தொடர்வதாக அறிவித்திருக்கிறார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், என் மீது அன்பு கொண்ட என் அன்பு மக்களுக்கு வணக்கம். நான் இப்போது சிறு மனவேதனையுடன் இந்த கடிதம் மூலம் சில சர்ச்சைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறேன். ஒரு சகோதரி யு-டியூப் சேனல் ஒன்றில் என்னையும், சகோதரர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களையும் தொடர்பு படுத்தி பொய்யான வதந்தி ஒன்றை பரப்பியுள்ளார். அது முற்றிலும் பொய்யே. அந்த யு-டியூப் சேனல் மீது நான் மான நஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன். மான நஷ்ட வழக்கில் வரும் தொகை அனைத்தையும் நலிவடைந்த இசைத்துறை நண்பர்களுக்கு முழுமையாக கொடுக்க முடிவு செய்துள்ளேன் என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார் விஜய் ஆண்டனி.
இப்படி அவர் அறிக்கை வெளியிடுவதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் சென்னையில் நடந்த ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கான பின்னணியில் பாஜக தலைவர் அண்ணாமலை இருக்கிறார் என்றும், அதில் விஜய் ஆண்டனிக்கும் தொடர்பு இருப்பதாக ஒரு யு-டியூப் தளத்தில் செய்தி வெளியிட்டனர். இதையடுத்து இப்படி ஒரு அறிக்கையை விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.