கொரியன் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டும் ராஷ்மிகா மந்தனா | பிக்பாஸ் மலையாளம் சீசன் 7 டைட்டில் வென்ற சீரியல் நடிகை அனுமோல் | நடிகையானதை தொடர்ந்து மூகாம்பிகை கோவிலுக்கு சென்று வழிபட்ட விஸ்மாயா மோகன்லால் | முதன்முறையாக தமிழில் அனுராக் காஷ்யப் கதையின் நாயகனாக நடிக்கும் 'அன்கில் 123' | தீவிர மருத்துவ சிகிச்சையில் நடிகர் தர்மேந்திரா : உடல்நிலையில் முன்னேற்றம் என மகள் தகவல் | ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |

நடிகை கவுதமி 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். அதன்பிறகு நடிகர் கமல்ஹாசன் உடன் வாழ்ந்து வந்தார். பின்னர் இருவரும் பிரிந்தனர். தமிழில் கடைசியாக 'பாபநாசம்' படத்திற்கு பிறகு கவுதமி இன்னும் எந்ந தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. தற்போது அவர் பா.ஜ., கட்சியில் உள்ளார். இந்நிலையில் ஒரு தெலுங்கு படத்தில் கவுதமி நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் பவன் கல்யாண், ஸ்ரீலீலா நடித்து வரும் திரைப்படம் 'உஸ்தாத் பகத் சிங்' . இதில் பவன் கல்யாணுக்கு அம்மாவாக கவுதமி நடிப்பதாக கூறப்படுகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். அடுத்த வருடம் இத்திரைப்படம் திரைக்கு வருகிறது.




