'பெத்தி' படத்தில் சிவராஜ் குமார் முதல் பார்வை வெளியீடு | ‛பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீ மேக்கான ‛தடக் 2' டிரைலர் வெளியீடு, ஆக., 1ல் ரிலீஸ் | சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி |
டில்லியில் மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதையடுத்து பாலியல் குற்றவாளிகளை தண்டிக்க புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அதற்கான மசோதாக்களும் தயார் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் பாலுறவுக்கான வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்க முடிவு செய்தனர். ஆனால் இதற்கு அரசியல் கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தன. அதனால் 18 வயதே பாலுறவுக்கான வயதாக நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த வயது சர்ச்சை குறித்து நடிகை குஷ்பூ வெளியிட்டுள்ள அறிக்கையில், செக்ஸ்க்கான வயதை 16 ஆக குறைப்பதன் மூலம் கற்பழிப்பு குற்றம் குறையும் என்பதை எப்படி எதிர்பார்க்க முடியும். கற்பழிப்பு சம்பவமானது வயதை கணக்கில் கொண்டு நடைபெறவில்லை. வயது வித்தியாசமின்று நடந்து வருகிறது. அதனால் அதற்கான வயது வரம்பை கூட்டுவதாலோ, குறைப்பதாலோ தவறுகள் குறையப்போவதில்லை. அதனால் கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க என்னென்ன சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும் என்பதைப்பற்றி மட்டும்தான் யோசிக்க வேண்டும். அதில்தான் பலன் கிடைக்கும் என்று கருத்து கூறியிருக்கிறார்.