பிரித்விராஜின் ஆடு ஜீவிதம் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | நயன்தாரா, தமன்னாவை ஓவர்டேக் செய்த வாமிகா கபி | மழை காரணமாக 'டல்' முன்பதிவுகள் | அஜித் - வெற்றிமாறன் கூட்டணி? | 18 மொழிகளில் வெளியாகும் ஜெயம் ரவி படம் | ரூ.60 கோடியில் உருவாகும் விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் படம் | அயலான் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து அப்டேட் இதோ | தங்கலான் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த மாளவிகா மோகனன் | ரீ ரிலீஸில் சாதனை செய்த தனுஷ் படம் | மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை வேண்டாம் : த்ரிஷா |
பாலிவுட் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்டவர் அனுராக் காஷ்யப். தமிழ் படங்களின் மீது ஆர்வம் கொண்டவர். தமிழில் வெளிவந்த 'சுப்பிரமணியபுரம்' படத்தை ஆதாரமாக கொண்டுதான் புகழ்பெற்ற 'கேங்ஸ் ஆப் வசிப்பூர்' படத்தை இயக்கினார். அதன்பிறகு 'இமைக்கா நொடிகள்' படத்தில் நயன்தாராவிற்கு வில்லனாக நடித்தார், தற்போது 'லியோ'வில் விஜய்க்கு வில்லனாகவும், 'மஹாராஜா'வில் விஜய்சேதுபதிக்கு வில்லனாகவும் நடித்துள்ளார்.
இதுதவிர 'ஒன் 2 ஒன்' என்ற படத்தில் சுந்தர்.சிக்கும் வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்தை 24 ஹவர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. கே.திருஞானம் இயக்கி உள்ளார். திரிஷா நடிப்பில் உருவாகி வெளியான 'பரமபதம் விளையாட்டு' படத்தை தொடர்ந்து இயக்குனர் திருஞானம் இயக்கும் இரண்டாவது படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. விஜய் வர்மன் மற்றும் நீது சந்திரா முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும் ராகினி திவேதி, பேபி மானஸ்வி ஆகியோரும் இணைந்து நடிக்கின்றனர். சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார்.