ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் | 2025 தமிழ் சினிமா ஒரு ரீ-வைண்ட் | ஜன.3ல் 'பராசக்தி' பாடல் வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புகையிலை விளம்பரத்திற்கு ரூ.40 கோடி: தைரியமாக மறுத்த சுனில் ஷெட்டி | ‛பருத்திவீரன்' புகழ் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார் | 2026லாவது அஜித் படம் வருமா | அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் |

மலையாள திரையுலகில் இளம் முன்னணி நடிகராக நடித்து வருபவர் உன்னி முகுந்தன். தமிழில் தனுஷ் நடித்த சீடன் மற்றும் அனுஷ்காவின் பாகமதி, சமந்தாவின் யசோதா உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களில் தயாரிப்பாளராக மாறி இவர் தயாரித்து நடித்த மேப்படியான் மற்றும் மாளிகைப்புரம் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியையும், கோடிகளில் வசூலையும் குவித்தன.
இவர் தெலுங்கில், மலையாளத்தில் நடித்த படங்கள் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியானாலும் 2011ல் சீடன் படத்தில் நடித்ததை தொடர்ந்து கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் நேரடி தமிழ் படத்தில் நடிக்கிறார். எதிர்நீச்சல், கொடி உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் டைரக்ஷனில் சூரி கதையின் நாயகனாக நடிக்கும் படத்தில் தான் உன்னி முகுந்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் சசிகுமாரும் இன்னொரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் கதை எழுதுகிறார்.




