ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் | 'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி | மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? |

மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் விஜய் நடித்துள்ள படம் லியோ. இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதாலும், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடர் வெற்றிகளை கொடுத்து வருவதாலும் லியோ படத்திற்கான எதிர்பார்ப்பு தமிழகத்தை தாண்டி வெளிநாட்டிலும் கூட மிகப்பெரிய அளவில் இருக்கிறது. தற்போது இங்கிலாந்தில் இந்த படத்திற்கான முன்பதிவு துவங்கி அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்து விட்டன.
இந்த நிலையில் இங்கிலாந்தில் இந்த படத்தை வெளியிடும் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் லியோ படம் வெளியாகும் முதல் வாரத்தில் படத்தில் எந்த கட்டும் இல்லாமல் அப்படியே திரையிடுவோம்.. இந்த படத்தை எந்த கட்டும் இல்லாமல் பார்க்க விரும்பும் ரசிகர்களின் உணர்வை மதிப்பதால் படத்தின் ஒவ்வொரு பிரேமும் முக்கியமானது.
அதே சமயம் ஒரு வாரம் கழித்து குடும்பத்தினருடன் அனைவரும் பார்க்கும் விதமாக 12A சான்றிதழுடன் இந்தப் படம் வேறு ஒரு வெர்ஷனில் திரையிடப்படும். தேவையான அளவு பார்வையாளர்கள் லியோ படத்தை உள்ளது உள்ளபடி பார்த்து விட்டார்கள் என தெரிய வந்ததும் இந்த பேமிலி பிரெண்ட்லி வெர்ஷன் திரையிடப்படும் என்று கூறியுள்ளனர்.
லோகேஷ் கனகராஜின் படங்களில் அதிக அளவில் வன்முறை காட்சிகள் இடம் பெறுவது வாடிக்கை. சமீபத்தில் வெளியான ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் கூட லண்டனில் வெளியாவதில் சென்சார் கெடுபிடிகளால் பிரச்சனைகளை சந்தித்தது. அதனாலேயே இந்த படத்தை இரண்டு வெர்ஷன்களாக வெளியிட விநியோக நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.