ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து | சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் |
அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜவான் திரைப்படம் வெற்றியை பெற்றுள்ளது. இதில் கதாநாயகியாக நடித்து பாலிவுட்டிலும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளார் நயன்தாரா. அதுமட்டுமல்ல இதில் வில்லனாக நடித்த விஜய்சேதுபதியின் வில்லத்தனமும் பாலிவுட்டில் பிரபலமாக பேசப்படுகிறது. இந்த படத்தில் ஷாரூக்கானின் பெண்கள் டீமில் ஒருவராக நடித்துள்ள ஆலியா குரேஷி என்பவர் விஜய்சேதுபதியுடன் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.
விஜய்சேதுபதி பற்றி அவர் கூறும்போது, “விஜய்சேதுபதியை நான் ரொம்பவே நேசிக்கிறேன். அவரைப் பற்றி யாராவது தவறான வார்த்தைகள் சொன்னால் அவர்களுடன் சண்டையிட தயாராக இருக்கிறேன்.. அவர் ஒரு மென்மையான மனிதர்.. அவருடன் பேசும்போது ஒரு நடிகரிடமோ அல்லது மிகப்பெரிய நட்சத்திரத்திடமோ பேசுகிறோம் என்கிற உணர்வே தோன்றாது. அவருக்கென வசனம் சொல்லித் தந்து காட்சிகளை விளக்க ஒரு டீம் இருந்தாலும் கூட அவர் அதிலும் தன் பாணியில் சில விஷயங்களை சேர்த்துக் கொண்டு தனித்தன்மை காட்டக் கூடியவர். அவரிடம் கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.