பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
யுனிவர்ஸ் கிரியேஷன்ஸ் சார்பாக அருணாச்சலம் வைத்யநாதன் தயாரித்து, இயக்கி உள்ள படம் 'சாட் பூட் த்ரீ'. வெங்கட்பிரபு, சினேகா, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் தெரு நாய்களுக்கும், சமூகத்திற்கும் இடையிலான உறவை சொல்லும் படமாகும்.
இந்த படம் விலங்குகள் நல ஆர்வலரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான எம்பி மேனகாவிற்கு திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த மேனகா இதுகுறித்து கூறும்போது “ஷாட் பூட் த்ரீ” ஒரு மிகச்சிறந்த குழந்தைகளுக்கான திரைப்படம். இத்திரைப்படத்தைக் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் என அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டும் என்று பரிந்துரைக்கின்றேன்.
இத்திரைப்படம் பலமொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டால் எல்லைகளைக் கடந்து அனைத்து மொழி மக்களும் இத்திரைப்படத்தைக் கண்டுகளிக்கலாம். திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடி தளங்களில் வெளிவரும் சமயம் இத்திரைப்படம் இன்னும் பெரும்பான்மையான மக்களை சென்றடையும் என்று உறுதியாக நம்புகின்றேன். அனைத்து வயதினரின் இதயத்தையும் வருடும் ஒரு குடும்ப திரைப்படம். விலங்குகள் நலனில் அக்கறை கொள்ளவேண்டும் என்ற செய்தியுடன், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த கலவையாக இத்திரைப்படம் அமைந்திருப்பதால் குழந்தைகளுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் இத்திரைப்படம் ஒரு கட்டாயத் தேர்வாக அமையும்” என்றார்.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் அருணாச்சலம் வைத்தியநாதன் கூறும்போது, ‛‛மேனகாவிடமிருந்து இவ்வளவு உயர்ந்த பாராட்டுகளைப் பெறுவதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். விலங்குகள் நலனுக்காக தன்னை அற்பணித்துக் கொண்டவரின் இந்தப் பாராட்டு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. முடிந்தவரை அனைத்து குழந்தைகளிடமும் இத்திரைப்படத்தைக் கொண்டு செல்ல அவரது வார்த்தைகள் எங்களை உற்சாகப்படுத்துகின்றது. மேலும் இந்தப்படம் ஒரு நல்ல மாற்றத்திற்கு ஊக்கம் அளிக்கும் விதமாக இருக்கும் என்று நம்புகிறோம்” என்றார்.