'தேவரா' டிரைலர்: பான் இந்தியாக்கு 'செட்' ஆகுமா? | சின்னத்திரையில் இனி நடிக்கமாட்டேன்! பிரியங்கா அதிரடி | 13 வருட காதல்! காதலியை கரம்பிடித்த அவினாஷ் | ஹிந்திக்கு செல்லும் வேட்டையன் இயக்குனர் ஞானவேல் : என்ன கதை தெரியுமா? | ஆந்திரா, தெலங்கானா வெள்ளத்திற்கு சிம்பு நிதியுதவி | மலையாளத்திலிருந்து இறக்குமதியான 'மனசிலாயோ, தாவூதி' பாடல்கள்... - அனிருத் சம்பவம் | இறுதிக் கட்டத்தை நெருங்கிய தக் லைப் | நஷ்டத்தை சரி செய்ய ரவி தேஜா எடுத்த அதிரடி முடிவு | செப்.,21ல் வெளியாகும் ‛பிரதர்' பட இசை, டீசர் வெளியீட்டு விழா | விஜய் படத்தை தொடர்ந்து சூர்யா படத்திலும் பிரசாந்த்? |
சத்யராஜ், வசந்த் ரவி, தன்யா ஹோப் நடித்துள்ள சஸ்பென்ஸ் - ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் 'வெப்பன்'. புதிய டெக்னாலஜியில் வெளியீட்டிற்குத் தயாராகி வரும் இந்தப் படத்தை மில்லியன் ஸ்டுடியோ மன்சூர் தயாரித்திருக்க, குகன் சென்னியப்பன் இயக்கியுள்ளார். தமிழில் தயாராகி உள்ள இந்த படம் பான் இந்தியா படமாக வெளியாகிறது. இதற்காக படக் குழுவினர் இந்தியா முழுக்க புரமோசன் சுற்று பயணத்தை தொடங்கி உள்ளனர். முதல்கட்டமாக ஐதராபத், மும்பையில் புரமோசன் நிகழ்ச்சியை நடத்தினர்.
இந்த நிகழ்வில் இயக்குனர் குகன் பேசியதாவது: என் தயாரிப்பாளர் மன்சூர் சார், அஜீஸ், அப்துல் இவர்களுக்கு நன்றி. எந்த ஒரு தயாரிப்பாளரும் இந்த கதைக்கு இவ்வளவு பெரிய பட்ஜெட் தர யோசிப்பார்கள். என் கேரியரில் நிச்சயம் இது மிகப் பெரிய படி. கதையில் நம்பிக்கை வைத்து சத்யராஜ் சார் ஓகே சொன்னதும் படம் இன்னும் பெரிதானது. அவருக்கு நன்றி. அடுத்து வசந்த் ரவி சாரும் கதையின் மீது நம்பிக்கை வைத்தார். டிசி, மார்வெல் போல புதிய ஒரு உலகை உருவாக்க விரும்பினோம். ராஜீவ் மேனன் சார் சிறப்பாக செய்துள்ளார். தான்யா ஹோப் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அனைவருக்கும் நன்றி. என்றார்.
சத்யராஜ், பேசும்போது "இது போன்ற கதைகளில் நாங்கள் ஹீரோக்கள் இல்லை. இயக்குநர், ஒளிப்பதிவாளர், ஸ்டண்ட் மாஸ்டர், ஸ்பெஷல் எபெக்ட்ஸ் டீம், தயாரிப்பாளர்கள் இவர்கள்தான் ரியல் ஹீரோஸ். இதுபோன்ற படங்களுக்கு தயாரிப்பாளர் எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் செலவு செய்ய வேண்டும். 'பாகுபலி' படத்தின் போது தயாரிப்பாளர் சோபுவை பார்த்து பிரபாஸ் என்னிடம் விளையாட்டாக, 'பாருங்க சார், யாரோ பணம் போட்டு படம் எடுப்பது போல ஜாலியாக வந்து போகிறார்' என்று சொல்வார். அதே போலவே மன்சூர் சாரும் உள்ளார். வசந்த் ரவி, தான்யா ஹோப், ராஜீவ் மேனன், ராஜீவ் பிள்ளை எல்லாரும் சிறப்பாக செய்துள்ளனர்" என்றார்.