ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து | சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் |
அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் நடித்துள்ள ஜவான் படம் வருகிற ஏழாம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை தொடர்ந்து படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் ஷாரூக்கான், சோசியல் மீடியாவில் ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகிறார். இந்த நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில் சென்னைக்கு பயணித்தபோது ரஜினியை சந்தித்தேன். விஜய்யை சந்தித்தேன். ஆனால் அஜித்தை மட்டும் என்னால் சந்திக்க முடியவில்லை. அதுவும் கூடிய சீக்கிரம் நடக்கும் என்று தெரிவித்துள்ளார். ஷாருக்கானின் இந்த டுவீட்டை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். கடந்த 2001ம் ஆண்டு, அசோகா என்ற படத்தில் ஷாருக்கானும் அஜித்தும் இணைந்து நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.