டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சலார்'. பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ரவி பசூர் இசையமைக்கிறார். தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது .
பாகுபலி 2 படத்திற்கு பின் பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ, ராதே ஷ்யாம் மற்றும் ஆதி புருஷ் ஆகிய படங்கள் வரவேற்பை பெறவில்லை. இதனால் இந்த படத்தின் மூலம் எப்படியும் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டும் என பிரபாஸ் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார். அதோடு இது கேஜிஎப் பட புகழ் இயக்குனரின் படம் என்பதாலும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது.
கொரோனா உள்ளிட்ட பிரச்னையால் ஏற்கனவே ஒருமுறை ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. கடைசியாக வரும் செப்டம்பர் 28ம் தேதி வெளியாகும் என அறிவித்தனர். ஆனால், இப்போது ஒரு சில காரணங்களால் இப்படம் தள்ளிப்போகிறது என கூறப்படுகிறது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் இன்னும் முடியவில்லையாம். இதனால் 2024 ஜனவரி மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.