அட்லியின் 'ராக்கா' படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் ஷாருக்கான்! | சிவராஜ்குமாரை இயக்கும் எங்கேயும் எப்போதும் சரவணன் | விக்னேஷ் ராஜா நீங்கள் ஜீனியஸ் : தனுஷ் பாராட்டு | தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் ஜோவிகா! | 4வது 100 கோடியை தொடுமா எல்ஐகே | 1 கோடி இழப்பீடு கேட்டு தமன்னா தொடர்ந்த வழக்கு மீண்டும் தள்ளுபடி | 'அரசன்' பார்த்து அதிர்ச்சி அடைந்த தனுஷ் | முடிவுக்கு வரும் 'துரந்தர் 2' வசூல் | 'ஜனநாயகன்' லீக்: 3 முக்கிய குற்றவாளிகள் கைது | ஆங்கிலத்திலும் வெளியாகும் என்னுடைய முதல் படம் 'டாக்ஸிக்' தான் ; நடிகர் யஷ் |

கிரிக்கெட் வீரர் தோனி தயாரிப்பில் உருவான எல்ஜிஎம் என்ற படத்தின் இசை விழா சென்னையில் நடந்த போது, சிஎஸ்கே அணியில் நடிகர் யோகி பாபுவை இணைத்துக்கொள்ள தயார் என்று கூறியிருந்தார் தோனி. அதோடு, மேட்ச் நடக்கும் நேரத்தில் அவர் சரியாக கால்சீட் கொடுக்க வேண்டும். பயிற்சிக்கு சரியாக வர வேண்டும். முக்கியமாக பந்து வீசுபவர்கள் ஸ்டெம்பை நோக்கி வீச மாட்டார்கள். பேட்ஸ்மேனை நோக்கி தான் வீசுவார்கள். அதை எதிர் கொள்ளக்கூடிய திறன் யோகி பாபுவுக்கு இருந்தால் தாராளமாக அவர் வரலாம் என்றும் தெரிவித்திருந்தார் தோனி.
இந்த நிலையில், ஜவான் படத்தின் இசை விழா சென்னையில் நடைபெற்ற போது அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பாவனா, யோகி பாபு கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் மிக்கவர். அதனால் அவரை உங்களது கேகேஆர் டீமில் விளையாடுவதற்கு அழைப்பு விடுப்பீர்களா? என்று ஷாரூக்கானை நோக்கி ஒரு கேள்வி கேட்டார். அதற்கு ஷாரூக்கான், தனது கட்டை விரலை காட்டி தாராளமாக வரலாம் என்று சம்மதத்தை தெரிவித்தார்.