அபிராமிக்கு சிபாரிசு கடிதம் தர மறுத்த கமல் | ‛அலைபாயுதே' படத்தின் ரகசியத்தை முதல்முறையாக பகிர்ந்த மணிரத்னம்! | பள்ளி பருவத்தை நினைவுகூர்ந்த சாய் பல்லவி! | இயக்குனர் அவதாரம் எடுக்கும் லப்பர் பந்து நாயகி! | சாதி தொடர்பான படங்களை எடுப்பதில் உடன்பாடில்லை: கவுதம் மேனன் கருத்து | சிம்பு பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்! | ராம் கோபால் வர்மா கம்பேக் தருவாரா? | ‛ஜனநாயகன்' படத்தின் செகண்ட்லுக் போஸ்டர்: குஷியான ரசிகர்கள் | சவால் விடும் தாரா நடிகை | பத்மபூஷன் - சீனியர் நடிகர்களுடன் இணைந்த அஜித் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி உட்பட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருபவர் புகழ். அதோடு பல திரைப்படங்களிலும் காமெடியனாக நடித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி தனது காதலி பென்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் புகழ் -பென்சி தம்பதியர் இன்று தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி வரும் நிலையில், தனது மனைவி பென்சி கர்ப்பமாக இருக்கும் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டு ஒரு பதிவும் போட்டு உள்ளார் புகழ். அதில், என் அனைத்து சுக துக்கங்களிலும் என்னுடன் இருந்தவள் நீ. இனி இன்னொரு உயிரும் நம்முடன் இருக்கப் போகிறது என்று நினைக்கும் போது இதைவிட பெரிய மகிழ்ச்சி இந்த உலகத்தில் வேறு எதுவும் இல்லை. என்னை தகப்பனாக்கிய என் தாயுமானவளுக்கு அன்பு முத்தங்கள். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார் நடிகர் புகழ்.